செய்திகள்

நள்ளிரவில் 51 கி.மீ தூரம் காரில் தனியாக பயணம் செய்த 8 வயது சிறுவன்

சிறுவன்

ஜெர்மனியின் டார்மண்ட் நகரில் திடீரென ஒரு கார், போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக சென்றது. வாகனத்தை பின் தொடர்ந்த காவல்துறையினர் காரை பிடித்து நிறுத்தினர்.

ஓட்டுநர் இருக்கையை நெருங்கி பார்த்த போது காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நான்கரை அடி மட்டுமே இருந்த சிறுவன் ஓட்டுநர் இருக்கையில் ஸ்டீயரிங்கை பிடித்தவாறு அமர்ந்திருந்தான்.

உடனே சிறுவனை கீழே இறக்கி காவல்துறையினர் அவனிடம் விசாரணை நடத்தினர். அவன் கூறிய தகவல்களை கேட்டு காவலர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

சிறுவனுடைய வீடு சொயிஸ்ட் என்ற பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்திற்கும், சிறுவன் பிடிப்பட்ட டார்மண்ட் நகருக்கும் 51 கி.மீ வித்தியாசம் உள்ளது. இவ்வளவு தூரத்தை கடந்து சிறுவன் தனியாக கார் ஓட்டி வந்துள்ளான்.

மேலும், காவல்துறையினரிடம் பிடிப்பட்ட போது அவன் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் காரை இயக்கியுள்ளான். ஜெர்மன் நாட்டின் சாலை போக்குவரத்து விதிகளின் படி, இது கடுமையான விதிமீறல் குற்றமாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக சொயிஸ்ட் காவல்துறையினர் தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், தனியாக கார் ஓட்டிச் சென்றது ஏன்? என கேட்ட போது, சிறிய தூரம் வரை கார் ஓட்டி பார்க்க வேண்டும் என்று தனக்கு ஆசையாக இருந்தது என சர்வ சாதாரணமாக கூறியுள்ளான் அந்த சிறுவன்.

தனியாக கார் ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு 8 வயது தான் ஆகிறது. வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கையில், தன்னுடைய அம்மாவின் காரை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் நகர் வலம் சென்றுள்ளான் இந்த சிறுவன்.

முன்னதாக, வீட்டில் மகன் இல்லாததை அறிந்த பெற்றோர்கள், சம்பவம் நடந்த இரவு 1.15 மணியளவில் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் சிறுவனம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அப்போது காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்த சிறுவனின் தாய், ஏற்கெனவே இதுபோல ஒருமுறை தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனது மகன் கார் ஓட்டியதாகவும், அதற்காக மகனை கண்டித்ததாகவும் கூறினார். எனினும், இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சிறுவன் ஓட்டிச் சென்ற கார் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் மாடலாகும். சிறுவனின் குடும்பத்தார் காவல்துறையினரிடம் அளித்த புகாரில், காருடன் சேர்ந்து தங்களுடைய மகனும் கடத்தப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது, காரும் மகனும் பத்திரமாக கிடைத்துவிட்டது அவர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

ஜெர்மன் நாட்டு போக்குவரத்து விதிகளின் படி, வாகன உரிமம் இல்லாமல் ஒருவர் கார் உள்ளிட்ட ஊர்திகளை ஓட்டி காவல்துறையினரிடம் பிடிப்பட்டால் அவர்கள் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டி வரும். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சிறுவனுக்கு 8 வயது மட்டுமே ஆவதால், இந்த வழக்கில் அவனுடைய பெற்றோர்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top