செய்திகள்

257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.

கிங்ஸ்டனில் நடைபெற்ற போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 468 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது, இந்திய அணி.

இமாலய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய 4-ஆம் நாள் ஆட்டத்தின்போது, தனது 2-வது இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 257 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-க்கு, பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்திய வீரர் ஹனுமா விகாரி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே நடந்த டி 20, ஒரு நாள் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை தேடி தந்த கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

கோலி கேப்டனாக பொறுப்பேற்று, 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 28 வெற்றிகளை தேடி தந்துள்ளார். தோனி கேப்டனாக 27 வெற்றிகளை பதிவு செய்திருந்ததே, இதுவரை சாதனையாக இருந்து வந்தது. தற்போது அதனை கோலி முறியடித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top