செய்திகள்

தளபதியின் பெற்றோருக்கு பிடித்த தல படங்கள்!

தளபதியின் பெற்றோருக்கு பிடித்த தல படங்கள்

தல அஜித் நடிப்பில் வந்த படங்களில் சில படங்கள் தங்களுக்கு பிடிக்கும் என்று நடிகர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபனா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

MGR, சிவாஜி, ரஜினி, கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக அஜித், விஜய் விளங்குகிறார்கள். இவர்களுக்கு அடுத்து வேறு எந்த சினிமா நட்சத்திரங்களும் அந்த இடத்தை நிரப்பவில்லை என்று சொல்லலாம். தற்போது விஜய்யின் பெற்றோர்கள் ஒரு பேட்டியில் தங்களுக்கு பிடித்த அஜித் படங்களைப் பற்றி தெரிவித்திருக்கிறார்கள்.

தளபதி விஜய் நடிப்பில் “பிகில்” படம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. “பிகில்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அவர்களைத் தொடர்ந்து கதிர், இந்துஜா முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் ஜாக்கி ஷெராப் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ ஜி எஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படததை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய விஷ்னு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என்று இரு வேடங்களில் நடிக்கிறார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டு கோச்சாகவும், அப்பா விஜய் தாதாவாகவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு இப்படம் வெளிவரும் என்று பிகில் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த நேர்கொண்ட பார்வை.

ஸீ ஸ்டுடியோஸ் உடன் சேர்ந்து போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிக்கும் தல 60வது படம் ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.

இப்படத்தையும் ஹெச்.வினோத் இயக்கப்போகிறார். இதையும் போனி கபூர் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைத்து தயாரிக்கவுள்ளார். தல 60′ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் பெரும் பொருட்ச்செலவில் உருவாகவுள்ளது.

மேலும், இப்படத்தில் கார் சேஸ், பைக் சேஸ் என்று பெரும் ஆக்ஷன் காட்சிகள் உள்ளடங்கியுள்ளது என்று இயக்குனர் வினோத் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இப்படத்தின் காஸ்டிங் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

அஜித் , விஜய்யின் ரசிகர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்தாலும், இரண்டு நடிகர்களும் என்னவோ ஒன்றாகத் தான் இருக்கிறார்கள். அண்மையில் விஜய்யின் பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில் தங்களுக்கு பிடித்த அஜித் படங்கள் என ஒரு சில படங்கள் கூறியுள்ளார்கள்.

அதாவது எஸ்.ஏ.சி அவர்களுக்கு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்கள் ரொம்பப் பிடிக்குமாம். அதேபோல் விஜய்யின் தாயார் ஷோபனா வாலி, காதல் மன்னன், அமர்க்களம் ஆகிய படங்களை அடிக்கடி விரும்பி பார்ப்பார்களாம்.

இதனை அஜித் விஜய் ரசிகர்களும் இணையத்தில் பரப்பி வருகிறார்கள். இரண்டு ரசிகர்களும் இணைந்திருப்பது சினிமா உலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top