செய்திகள்

ஒரு மனுஷன் ‘வெயிட்’ பண்ணலாம்… இது உலக மகா ‘வெயிட்டிங்காவ்ல’ இருக்கு….!

வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது 126வது இன்னிங்சில் பங்கேற்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, ஆண்டிகுவாவில் நடந்தது. இதில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ‘ஆல்- அவுட்டானது’.

இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து 329 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இப்போட்டியில் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா (57), டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் நீண்ட காத்திருப்புக்கு பின் டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். இவர் தனது 126வது டெஸ்ட் இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார்.

அதிக டெஸ்ட் இன்னிங்ஸ் காத்திருந்து முதல் அரைசதத்தை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் இஷாந்த் (126) முதலிடம் பிடித்தார். பிஷன் சிங் பெடி (71), பிரசன்னா (84), சந்திரசேகர் (80) ஆகியோர் இப்பட்டியலில் அடுத்ததடுத்த இடத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top