செய்திகள்

அஜித் 60ன் வில்லன் அஜய் தேவகன்?

அஜித் 60ன் வில்லன்

அஜித் 60ன் வில்லன் : தமிழ் சினிமாவில் இப்போது வில்லன் நடிகர்களுக்கு நிறையவே பஞ்சம். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட வில்லன் நடிகர்களுக்கு தற்போது வயது கூடுதலாகிவிட்டது.

அத்துடன், அவர்களைப் பல படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் பார்த்துவிட்டதாலும் அவர்களை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் தயங்குகிறார்கள்.

விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு எதிராக பவர்புல் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு பாலிவுட்டிலிருந்து தான் நடிகர்களை அழைத்து வருகிறார்கள்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அவருடைய 60வது படத்திற்கு வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் அஜய் தேவன் ஒப்பந்தமாகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அஜய் தேவகன் தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

அந்தப் படத்தில் பிஸியாக நடிக்க வேண்டியிருப்பதால் அஜித் படத்தில் நடிக்க அஜய் சம்மதித்திருப்பாரா என்ற சந்தேகமும் உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top