செய்திகள்

பெற்ற தாயும் சகோதரரும் இளம்பெண்ணுக்கு செய்த கொடுமை!

மும்பை

பெற்ற தாயும் சகோதரரும் இளம்பெண்ணுக்கு செய்த கொடுமை! : மும்பையில் பெற்ற தாயே மகளை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், காப்பாற்றவேண்டிய சகோதரனே அந்த பெண்ணை கற்பழித்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 வயது கூட நிரம்பாத அந்த பெண்ணை ஆரம்பத்தில் அவரது தாயார் பணத்திற்காக கட்டாயப்படுத்தி ஒரு நபருக்கு தனது மகளை கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்துகொடுத்துள்ளார்.

அந்த பெண்ணை அவரது கணவர் அடித்து துன்புறுத்தி கற்பழிக்கவே கொடுமை தாங்க முடியாமல் அந்த பெண் தன் தாய் வீட்டிற்கே வந்துவிட்டார்.

மகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய தாய், தன் மகளை 60 வயது முதியவர் ஒருவரிடம் விபச்சாரம் செய்ய மகளை வற்புறுத்தி அனுப்பியுள்ளார். அந்த முதியவரின் சித்திரவதைகளை தாங்க முடியாத அந்த பெண் தன் கூட பிறந்த சகோதரனிடம் உதவி கேட்டுள்ளார்.

ஆனால் அந்த சகோதரனும் தனது பங்கிற்கு தனது சகோதரியையே அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி தவித்த அந்த பெண் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top