செய்திகள்

சிங்கம் புல் திங்கும் அதிசய காட்சி! தீயாய் பரவும் வீடியோ.

சிங்கம் புல் திங்கும் அதிசய காட்சி

சிங்கம் புல் திங்கும் அதிசய காட்சி : பொதுவாக புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். புலியே அப்படியென்றால் காட்டுக்கே ராஜாவான சிங்கம் மட்டும் புல்லை தின்னுமா என்ன?அப்படி இருக்க இந்த சிங்கம் வன பகுதியில் உள்ள புல்லை தின்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத்தின் அம்ரிலி மாவட்டத்தில் உள்ள கம்பா வனப்பகுதியில் உள்ள சிங்கம் ஓன்று புல்லை திங்கும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த காட்சி வைரலானதை அடுத்து வனத்துறை துணை பாதுகாவலர் சந்தீப் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக பூனை இதை சார்ந்த விலங்குகள் புல் தின்பது ஒன்றும் புதிதல்ல என்றும் அந்த விலங்குகள் மாமிசம் சாப்பிடுவதால் சில நேரங்களில் அஜீரண கோளாறு ஏற்படும்.

அதுபோன்ற சமயங்களில் ஒவ்வாத உணவை வாந்தி எடுத்து, வெளியேற்றுவதற்காக, இத்தகைய பச்சை புற்களை சாப்பிடும் என்றார். மேலும் இதுபற்றி அவர் கூறுகையில் சிங்கங்கள் இதனை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், புலிகள் சில நேரங்களில் இப்படி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top