செய்திகள்

கள்ளக் காதலனுடன் தாய் இருப்பதை நேரில் பார்த்த சிறுமிக்கு நடந்த கொடூரம்!

சென்னை வாலிபர்

வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமாகி 2 வயது குழந்தைக்கு தாயாக உள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு உதயகுமார் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அந்த பெண்ணின் தாய் அவரை கண்டித்துள்ளார். அதையும் மீறி அந்த இளம் பெண் உதயகுமாருடன் தனிவீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணின் தாயும் இறந்து விடுகிறார்.

உடனே தனது குழந்தையை தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறார். ஆனால் ஒரு நாள் அந்த குழந்தை தன்தாய் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து விடுகிறது.

அதனால் அந்த குழந்தையை கொன்று விட திட்டம் தீட்டிய உதயகுமார் குழந்தைக்கு தொடர்ந்து சிகரெட்டால் அனைத்து உறுப்புகளிலும் சூடு வைத்துள்ளார்.

குழந்தையின் நிலை அறிந்த அக்கம்பக்கத்தினர் குழந்தை நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் தாயையும்,கள்ள காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top