செய்திகள்

தமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, டுபாய் போன்ற நாடுகளுக்கு செல்லும் முதல்வர் அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொள்கிறார்.

மேலும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆகியவற்றிலும் முதல்வர் கலந்து கொள்ளவுள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் வரும் செப்டம்பர் 10ஆம் திகதி தமிழகம் திரும்பவுள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு பயணம் செல்ல உள்ள நிலையில் இன்று அவரை நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் சந்தித்தார்.

சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு சரத்குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்

இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top