செய்திகள்

இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா? பிக்பாஸ் ஐஸ்வர்யாவை செமையாக வச்சு செய்யும் ரசிகர்கள்!

ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

அதன்பின்னர் அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

ஆரம்பத்தில் ஆடல், பாடல் என குதூகலமாக இருந்தவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். ஆனால் நாளடைவில் இவரது அளவுக்கு மிஞ்சிய கோபத்தால் மக்களின் வெறுப்பை பெருமளவில் சம்பாதித்தார்.

இதில் சில விசயங்களால் அவர் மீது பலருக்கும் அதிருப்தி எழுந்தது. ஆனாலும் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியநிலையில் ஐஸ்வர்யா தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் தன்னுடன் நெருக்கமாக இருந்து உயிர் தோழியாக நறிய யாஷிகாவுடன் வெளியே சுற்றுவது என பிசியாக உள்ளார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா தற்போது மிகவும் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா என கிண்டல் செய்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top