செய்திகள்

பிறந்த நாள் விழாவில் கதறி அழுத விஜயகாந்த் மகன் பிரபாகரன்

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருடைய இல்லத்திற்கு நேற்று ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் என்ற பகுதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளை அடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் இந்த விழாவில் பேசும்போது, விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளதாகவும் ஆனால் ஒருசிலர் அவரது உடல் நிலை குறித்து அவதூறு பரப்புவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறியபோது அவருடைய கண்கள் கலங்கி ஒருகட்டத்தில் மேடையிலேயே அழுதார். விஜயபிரபாகரன் அழுதததை பார்த்த தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்து அதன்பின் அவருக்கு சமாதானம் தெரிவித்தனர்

இதனையடுத்து சுதாரித்து கொண்ட விஜயபிரபாகரன், இது ஆனந்தக்கண்ணீர் என்றும், தேவை இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தெரிவித்து பின்னர் அவர் தனது உரையை தொடர்ந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top