செய்திகள்

அஜித்தின் ‘விஸ்வாசம்’ பார்த்து அழுத விஜய் அப்பா.. ஏன் தெரியுமா?

விஸ்வாசம்

அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் தன்னை அழ வைத்துவிட்டது என நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அஜித்தும், விஜயும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள். இருவரின் ரசிகர்களும் அவர்களை கடவுளாக பார்க்கிறார்கள். ஆனால், எப்போதும் மோதிக்கொண்டே இருக்கிறார்கள்.

இது எனக்கு பிடிக்கவில்லை. அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் பார்த்த போது அப்படத்தில் இருந்த தாய்-தந்தை செண்டிமெண்ட் என்னை அழ வைத்து விட்டது. ஏனெனில் எனக்கு மறைந்த என் மகள் வித்யாவின் நியாபகம் வந்து விட்டது என அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

விஜயின் சகோதரி வித்யா சிறு வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top