செய்திகள்

திருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாமா? வீடியோவோடு பெண் செய்த காரியம்!

திருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாமா

திருமணத்திற்கு முன் ஒத்திகை பார்க்கலாமாநெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர், செந்தாமரை குளம் பகுதியில் பழகடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த வாலிபருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் வாலிபர் அகத்தீஸ்வரம் அருகே உள்ள ஒரு வீட்டிற்கு வாழைகுலை வாங்க அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு அப்பகுதியில் இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணும் இவரிடம் சாதாரணமாக பழகி வந்துள்ளார்.

மேலும் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் அந்த வாலிபர் இளம்பெண்ணிற்கு போன் செய்து, நான் உனக்கு திருமணம் குறித்து நிறைய விஷயங்கள் கற்றுத்தருகிறேன். ஒருமுறை நாம் ஒத்திகை பார்ப்போம் வருகிறாயா என கேட்டுள்ளார்.

அவரது தவறான கண்ணோட்டத்தை புரிந்து கொண்ட அந்த பெண் அவரை தனியாக தென்னந்தோப்புக்கு வரும்படி கூறியுள்ளார். அந்த நபரும் மிகவும் உற்சாகத்துடன் வந்தநிலையில் அவரை இளம்பெண் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

மேலும் மனைவியிடம் இப்படி யாராவது கேட்டால் நீ சும்மா இருப்பியா அல்லது உனது மகள் மற்றும் தங்கையை இப்படி அனுப்பி வைப்பியா என கேட்டவாறு அடித்து தாக்கியுள்ளார்.

அடித்தாங்க முடியாமல் அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். மேலும் ஊரில் யாருக்காவது இது தெரிந்தால் நான் செத்து விடுவேன் என அந்த வாலிபர் கூற, ஒரு பெண்ணை படுக்கைக்கு அழைக்கும் நீ உயிருடன் இருப்பதை விட சாகலாம் எனக் கூறி மீண்டும் மீண்டும் இளம்பெண் அந்த வாலிபரை தாக்குகிறார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார்.

இளம்பெண்ணின் முகம் தெரியாமல், அந்த வாலிபரின் முகம் மட்டும் நன்கு தெரியும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top