செய்திகள்

பொதுவிழாவில் ஸ்ரீதேவியின் மகள் செய்த காரியம்.! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

ஜான்வி கபூர்

சினிமா துறையில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தற்போது ஹிந்தியில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

மேலும் தமிழில் அவரது தந்தை போனிகபூர் தயாரிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரது தயாரிப்பிலேயே மீண்டும் அஜீத்தின் அடுத்த படம் உருவாக்கவுள்ளது.

இந்நிலையில் ஜான்வி கபூர் டெல்லியில் நேற்று நடந்த Calling Sehmat என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அங்கு கலந்து கொண்ட பல பிரபலங்களும் தங்களது கைகளில் புத்தகத்தை வைத்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

அப்பொழுது அனைவரும் புத்தகத்தை நேராக பிடித்து இருந்த நிலையில் ஜான்வி மட்டும் தலைகீழாக பிடித்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில் நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜான்வி கபூர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top