செய்திகள்

தண்டவாளத்தில் மூன்று சடலங்களுக்கு நடுவே மழையில் கதறி அழுத குழந்தை!

பீகார்

பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதியில் ரயில் தண்டவாளத்தில் நேற்று மதியம், மூன்று வயது குழந்தை மழையில் நனைந்தபடியே அழுதுகொண்டிருந்துள்ளது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், குழந்தையின் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் அவருடைய இரண்டு ஆண் குழந்தைகளின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்தி இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயங்களுடன் உயிர்தப்பிய குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், வறுமை அல்லது வீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பால் குழந்தைகளுடன் சேர்ந்து அவர்களுடைய தாய் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும், இறந்தவர்களை பற்றிய அடையாளம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் அதனை கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top