செய்திகள்

வைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்!

வைரலாகும் அஜித்தின் புதிய தோற்றம்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 60வது படத்தை நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். சமீபத்தில் அஜித் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது இன்னொரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அஜித் கிளீன் ஷேவ் செய்து மொழு மொழுவென்று அமுல் பேபி போல் இருக்கிறார்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் அஜித்துடன் இருப்பவர் நீச்சல் போட்டியில் கின்னஸ் சாதனைப்படைத்த குற்றாலீஸ்வரன்.

இந்த சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக குற்றாலீஸ்வரன் ரமேஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

அஜித்தின் எளிமை வியப்பாக இருந்தது. அஜித் விளையாட்டு குறித்து ஆலோசித்தார் என்று தெரிவித்திருந்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் குற்றாலீஸ்வரனின் ரசிகன் என்று அஜித் தெரிவித்ததாகவும் பதிவிட்டிருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top