செய்திகள்

தீபாவளிக்கு முன்னரே வருகிறான் பிகில்!

bigil-arrives-ahead-of-diwali

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தை அக்டோபர் 24 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தின் படப்பிடிப்பு சமிபத்தில் நிறைவடைந்தது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்திற்கான டப்பிங் வேலை ஆரம்பமாகியுள்ளது. டப்பிங் வேலைகளையும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தை அக்டோபர் 24 வியாழக்கிழமை ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் டீசரோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top