செய்திகள்

முதல் மனைவியை குப்பை போல தூக்கி எறிந்தாரா சாண்டி.!

Bigg Boss,Bigg Boss Promo,Bigg Boss Tamil 3

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களை தேடி பிடித்து பேட்டி கண்டு வருகின்றனர்.

அதே போல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபெற்ற காஜலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக பின்தொடர்ந்து வருகிறார்.

அதிலும் இவரது முன்னாள் கணவரான சாண்டி குறித்து யாரேனும் தவறாக பேசினால் உடனே ட்விட்டரில் பொங்கிவிடுகிறார் காஜல்.

அதே போல நேற்று சாண்டிக்கு திருமண நாள் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் காஜல். இந்த நிலையில், ரசிகர் ஒருவர் காஜலிடம் அந்த கேடு கெட்டவன் உன்ன குப்பை மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான்.. நீ அவனுக்கு கூஜா தூக்கிட்டு திரியுற என்று பதிவிட்டிருந்தார்.

இதனால் கடுப்பான காஜல், அவரு என்னை தூக்கி எறிஞ்தை நீ பாத்தியா.. உன் அளவுக்கு கீழே இறங்கி பதில் சொல்ல நான் விரும்பல, பரஸ்பர சம்மதம் என்று ஒன்று உள்ளது. மத்தவங்க லைஃப் பத்தி தெரியாமா எல்லாத்துக்கும் கதறாத என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top