செய்திகள்

மீராவின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஜோ மைக்கேல்

மீரா

கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடிக்கடி தன்னை பற்றிய அப்டேட்களை அள்ளி வீசி வருகிறார் மீரா.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நண்பர்களுடன் மீரா மிதுன் பீர் குடித்துகொண்டே ரசிகர்களுடன் லைவ் சாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அதில் பேசியுள்ள பீர் குடிப்பது ஒன்றும் தவறு இல்லை. அது வெறும் பார்லி தான் என்றும் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவிவந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், அவரது தோழர் ஒருவருடன் உரையாடும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் கூட சேரன் பெயரை கெடுக்க திட்டம் தேடியுள்ளார் மீரா.

இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அதே போல மீரா மிதுன் குறித்து ஆரம்பம் முதலே ஜோ மைக்கேல் என்பவர் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜோ மைக்கேல், மீரா மிதுன் குறித்து மேலும் சில ஷாக்கிங் உண்மைகளை கூறியுள்ளார்.

மேலும், மீரா மிதுன் பல்வேறு திருமணமான நடிகர்களுடன் நெருக்கமாக பேசிய உரையாடல்களை எல்லாம் அவரது செல் போனில் ரெகார்ட் செய்துள்ளார்.

அந்த ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், மீரா மிதுன் இரண்டாவது ஸ்ரீரெட்டி என்று கூறியுள்ள ஜோ மைக்கேல், எல்லா நடிகர்களும் கொஞ்சம் ஜாக்கிரதையாக மீராவிடம் பேசுங்கள் உங்கள் அழைப்பெல்லாம் ரெகார்ட் செய்யபட்டுள்ளது.

மீராவின் டார்கெட் எல்லாம் திருமணமான நடிகர்கள் மட்டும் தான். அவர்களை மிரட்டி பணம் பறிப்பது தான் அவரின் திட்டம் என்று கூறியுள்ளார் ஜோ மைக்கேல்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top