செய்திகள்

கவின் – கஸ்தூரி மீண்டும் மோதலா?

கவின்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்த கஸ்தூரிக்கும் கவினுக்கும் ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

கஸ்தூரியை ‘காக்கா’ என கவின் கூற, கவினின் நான்கு பெண்கள் விஷயத்தை மீண்டும் மீண்டும் கஸ்தூரி கிளற, இருவரும் அவ்வப்போது மோதிக் கொண்டு வந்ததை நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

மேலும் கமல்ஹாசன் கூட இதுகுறித்து விசாரித்தபோது கஸ்தூரிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் என்றும், பழைய பிரச்சினைகளை அவர் மீண்டும் மீண்டும் கிளறுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கவினுக்கும் கஸ்தூரிக்கும் நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதாகவும், கவின் தன்னை தீய நோக்கத்துடன் தொட்டதாகவும் கஸ்தூரி பிக்பாஸிடம் புகார் கூறியதாக சமூகவலைதளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.

மேலும் கஸ்தூரி கோபத்தில் கேமராவை உடைத்து விட்டதாகவும் இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக ஒரு சில மணிநேரங்கள் பிக்பாஸ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்றைய நிகழ்ச்சியில் அல்லது புரமோ வீடியோவில் தெரியவரும்.

ஏற்கனவே மதுமிதா காவிரி பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கும் ஷெரினுக்கும் ஏற்பட்ட மோதலால் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது கஸ்தூரியும் கேமிராவை உடைத்தது பிக்பாஸ் விதிமுறை மீறல் என்பதால் அவரும் வெளியேற்றப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top