செய்திகள்

பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்த ஜூலி.! அதுவும் ஆக்ஷன் படத்தில்.!

தமிழகத்தில் வரலாற்று – போராட்டமாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத் தமிழச்சி என்று பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் நடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு பின்னர் இவரது நல்ல பெயர் அனைத்தும் அப்படியே ரிவர்ஸ் ஆகி விட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவருக்கு பல ஹீட்டர்ஸ்கள் உருவாகிறார்கள். இவரைப் பற்றிய எந்த செய்திகள் வந்தாலும் இவரை சமூகவலைதளத்தில் வறுத்து எடுத்து வந்தனர் .

ஆனால், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ, சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி.

மேலும், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிவருகிறார் ஜூலி. இறுதியாக இவரது விமல் நடித்த மன்னர் வகையறா படத்தில் நடித்திருந்தார் ஜூலி. அதன் பின்னர் இவர் கதாநாயகியாக நடித்த இரண்டு படங்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் ஐஸ்வர்யா நடிக்க உள்ள pubg என்ற புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளாராம் ஜூலி. பொல்லாத உலகில் பயங்கர கேம் என்று தலைப்பை வைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 15) வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்தர், ஜூலி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top