துருக்கி நாட்டில் லிப்ட் ஒன்றில் கயிறு மூலம் சிக்கிய தனது தம்பியை, புத்திசாலித்தனமாக செயல்பட்டு சிறுமி காப்பாற்றியுள்ளார்.
துருக்கி நாட்டின் இஸ்தான்பூல் பகுதியில் லிப்ட் ஒன்றில் 2 சிறுமிகள், ஒரு சிறுவன் உட்பட மூவர் ஏறுகின்றனர். இதில் சிறுவன் கயிறுடன் கட்டியபடி ஏறினான்.
கயிறின் ஒரு நுனி லிப்டின் கதவுக்கு இடையில் சிக்கிக்கொள்ள அதன் மறுநுனி சிறுவனின் தலையில் இருந்தது. இந்த நிலையில், லிப்ட் செயல்பட தொடங்கியவுடன் அச்சிறுவனின் தலையில் கட்டப்பட்டு சிக்கிய கயிறு, மெதுவாக மேலே சென்றது.
இதில் அச்சிறுவன் சிக்கியதுடன், திடீரென மேலே தூக்கப்பட்டான். இதனால் முதலில் சிறுவன் மூச்சு விட திணறினான்.
இதனை பார்த்த, அருகில் இருந்த சிறுவனின் சகோதரி அவனுக்கு மூச்சு திணறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கால்களை உயர்த்தி பிடித்துக் கொண்டாள். பின்னர் லிப்டில் இருந்த எமர்ஜென்ஸி பட்டனை அழுத்துகிறாள்.
பின்னர் மெதுவாக கீழே இறக்குகிறாள். இந்த சம்பவம் அங்கிருந்த லிப்டில் பாதுகாப்புக்கு வைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.