செய்திகள்

காதலனுடன் மனைவி ஓட்டம்: புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

காதலனுடன் மனைவி ஓட்டம்

காதலனுடன் மனைவி ஓட்டம் : கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனைவி காதலனுடன் ஓடிப்போனதை தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

நாகை மாவட்டத்தில் இளம் பெண்ணில் காதலை அவளது பெற்றோர் ஏற்காமல் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். 19 வயதான அந்த பெண்ணுக்கு 35 வயது நபருடன் திருமணம் நடந்து முடிந்து 40 நாட்களே ஆகியுள்ளது.

இதற்கிடையே ஆடி மாதம் என்பதால் அம்மா வீட்டிற்கு சென்ற இளம் பெண் அங்கு காதலனை சந்தித்து ஓடிப்போக திட்டமிட்டு அவ்வாரே செய்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்து வேதனையும் அவமானமும் அடைந்த புதுமாப்பிள்ளை வீட்டில் இருந்த வயல் தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டார்.

உயிருக்கு போராடும் நிலையில் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top